Home நாடு தரமான வீடுகள் கட்டிக் கொடுக்காததால் சிலாங்கூர் மாநிலத்திற்கு எதிராக மறியல்

தரமான வீடுகள் கட்டிக் கொடுக்காததால் சிலாங்கூர் மாநிலத்திற்கு எதிராக மறியல்

730
0
SHARE
Ad

Low-Cost-Housing-Sliderஷாஆலம், மார்ச்.18- வசதி குறைந்தவர்களுக்கு மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டி தருகிறது என்பது அனைவரும் அறிந்ததே!

ஆனால் சிலாங்கூர் அரசாங்கம் மலிவு வீடுகளின் விலையை உயர்த்தி இருப்பதோடு தரமற்ற பொருட்களை உபயோகித்து  அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டுவதாக   சிலாங்கூர்  மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கம்போங் பூங்கா ராயா குடியிருப்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வீடமைப்பு திட்டம் குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.  தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி காலத்தில் 35,000 விலைக்கு  வீடுகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது புதிய மேம்பாட்டாளர்கள் 42,000 வெள்ளி முதல் 62,000 வெள்ளி வரை விலையை உயர்த்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இப்பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி இருந்தும் இது வரை தங்களுக்கு  இது நாள் வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரவித்தனர். வசதி குறைந்த எங்களை போன்றவர்களுக்கு என்ன தான் வழி என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்.