இந்திய கேரள கடலோர பகுதியில் 2 மீனவர்கள் இத்தாலி கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .தொடர்ந்து ஜாமினில் இருந்து வந்தனர். இந்நிலையில் இத்தாலி தேர்தலுக்காக சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கோர்ட்டில் அனுமதி பெற்று தாய்நாட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா வரவில்லை. இந்த விவகாரம் இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பிரதமரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனால் இத்தாலியுடனான தூதரக உறவுகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
2 வீரர்கள் நிபந்தனையின் பேரில் இத்தாலி செல்ல காப்புறுதி பத்திரத்தில் (அபிடவிட்) தூதர் மான்சினி கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிபந்தனை மீறப்படுவதால் இவரை கைது செய்ய சட்டத்தில் வழி முறை இருக்கிறது.