மிலன், ஏப்ரல் 25 – பாகிஸ்தானின் பெஷாவர் மார்க்கெட்டில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த தாக்குதல் உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு இத்தாலியில் உள்ள தீவிரவாத அமைப்பு உதவி செய்வதாக வந்த தகவலையடுத்து, அவர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்ய இத்தாலி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 18 பேருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை சர்டினியாவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த 18 பேரில் சிலர், பாகிஸ்தானில் உள்ள கொடூரமான தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை உருவாக்குவதே இந்த தீவிரவாத கும்பலின் நோக்கம் என்றும் இத்தாலி காவல்துறை தெரிவித்துள்ளது.