Home இந்தியா இத்தாலி வீரர்கள் மீது கொலை வழக்கு

இத்தாலி வீரர்கள் மீது கொலை வழக்கு

615
0
SHARE
Ad

Tamil_News_large_672496புதுடில்லி, ஏப்.5- கடந்த 2012- பிப்ரவரி மாதம் இரு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இரு இத்தாலி கடற்படை வீரர்கள் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ.) கொலை வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையினை தாக்கல் செய்தனர் .

இரு இத்தாலி கடற்படை வீரர்களான மிஸிமிலின‌ோ லதோர், சல்வதோர் ஜிரோம் ஆகிய இருவர் மீது ஐ.பி.சி.பிரிவு 34-ன் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இத்தாலி பிரதமர் மரியோ மவுன்டி, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷீத்தை தொலைபேசி வாயிலாக பேசினார். இரு கடற்படை வீரர்கள் வழக்கு விசாரணை குறி்த்து கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.