புதுடில்லி, ஏப்.5- கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று காலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
இந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழகம் சார்பில் 6 சாதனையாளர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 109 பேரில் தமிழக திரைப்பட பாடகி ஜானகி இந்த விருதை புறக்கணித்தார் . நடிகை ஸ்ரீதேவி, ராகுல் டிராவிட்டும் தங்களுடைய விருதை பெற்றனர்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த உயரிய விருதுகள் கலை, அறிவியல், சமூகசேவை, பொதுவிவகாரம், இன்ஜினியரிங், வர்த்தகம், தொழில்துறை, மருத்துவம், கல்வி, விளையாட்டு, சிவில்சர்வீஸ் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
2013 ம் ஆண்டுக்கான இந்த விருது மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 5 பேருக்கு பத்மவிபூஷண், 27 பேருக்கு பத்மபூஷன், 77 பேருக்கு பத்மஸ்ரீ, வழங்கப்பட்டுள்ளது. இதில் 19 பேர் பெண்கள் ஆவர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் அடங்குவர்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை எடுத்து வழங்கினார்.