இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு நீதிமன்றம் இயங்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க கேரள மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மட்டுமே இதற்கு அதிகாரம் என்று விளக்கம் அளித்துள்ளது.
தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து மத்திய அரசு விரைவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆலப்புழா அருகே கடலில் நின்று கொண்டிருந்த இத்தாலி வணிக கப்பலின் மாலுமிகள் சுட்டதில் இந்திய மீனவர்கள் 2 பேர் இறந்தனர்.