Home உலகம் பாகிஸ்தானில் சீனாவின் அணு உலை:அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தை சீனா மீறுவதாக இந்தியா கவலை!

பாகிஸ்தானில் சீனாவின் அணு உலை:அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தை சீனா மீறுவதாக இந்தியா கவலை!

682
0
SHARE
Ad

Nucleur-power-plantமார்ச் 26 – பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் சீனா அணு உலை கட்டுவதால் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்கனவே 2 அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு புதிய அணுமின் நிலையம் கட்டுவதற்காக சீனாவும், பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன் மூலம் சர்வதேச அணு ஆயுத தடை தொடர்பாக பெய்ஜிங்கில் அளித்த வாக்குறுதியை சீனா மீறிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அணு ஆயுதப் பரவல் சட்டத்தை மீறவில்லை என சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும் சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்டுபட்டே சீனா செயல்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே சீனாவின் விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு அச்ச உணர்வை ஏற்படுத்தவே சீனா மற்றும் பாகிஸ்தானின் இந்த திட்டம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.