Home இந்தியா இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் தேர்தலை அறிவித்த பாகிஸ்தான்!

இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் தேர்தலை அறிவித்த பாகிஸ்தான்!

634
0
SHARE
Ad

Khunjerab-Pass_650_with_credit

புதுடில்லி, ஜூன் 3-இந்தியாவுக்குள் அடிக்கடி அத்துமீறி ஊடுருவுவதும் தாக்குதல் நடத்துவதும் பாகிஸ்தானின் வாடிக்கைகளில் ஒன்று.இப்போது ஒருபடி மேலே சென்று இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் தேர்தலை அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கில்கிட்,பல்டிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளாகும்.ஆனால்,அப்பகுதிகளைப் பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததோடு மட்டுமில்லாமல், அப்பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி தேர்தல் என்றும் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியிருப்பதாவது:

“கில்கிட்,பல்கிஸ்தான் உட்பட அனைத்துக் காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.அப்படி இருக்கும் போது அப்பகுதியில் பாகிஸ்தான் தேர்தலை அறிவித்திருப்பது அத்து மீறலின் உச்சமாகும்.மேலும் அப்பகுதிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதை மூடி மறைக்க முயலும் அடாவடிச் செயலாகும்.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால் அந்தப் பகுதி மக்கள் சமீபகாலமாக இனக் கலவரங்களாலும் தீவிரவாதத்தாலும் பொருளாதாரச் சிரமங்களாலும் அல்லல்பட்டு வருகிறார்கள்.இத்தகைய அத்துமீறலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது.”என்றார்.

அமைதியையும் சமாதானத்தையும் மட்டுமே விரும்பும் இந்தியாவின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயலைப் பாகிஸ்தான் விட்டு விடுவதே இரண்டு  நாட்டிற்கும் என்றென்றைக்கும் நன்மை பயக்கும் செயலாகும்.