Home கலை உலகம் மிரட்ட வருகிறார் தபு!

மிரட்ட வருகிறார் தபு!

579
0
SHARE
Ad

thpu

சென்னை, ஜூன் 4 – காதல் தேசம் படத்தில் நடித்த தபு அதன் பிறகு தமிழில்  ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ முதலிய ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார்.

அந்தப் படங்கள் ஓரளவு வசீல் ரீதியாக வெற்றியடைந்த போதிலும் தபுவிற்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

எனவே, இந்திப் படங்களில் முழுக் கவனம் செலுத்தி நடிக்கத் தொடங்கினார்.அங்கே அவருக்குச் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

இருப்பினும்,சமீப காலமாக அவருக்கு அங்கேயும் பேர் சொல்லும் அளவுக்குப் படங்கள் அமையவில்லை.

இந்தக் குறையைப் போக்குவதற்காக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் தபு.

த்ரிஷ்யம் இந்தி மறு பதிப்புப் (remake) படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.

இந்தப் படத்திற்குப் பின் தபு,இந்தியில் தனது இரண்டாவது ஆட்டத்தை ஆரவாரமாகத் தொடங்குவது உறுதி என்கின்றனர் இந்தித் திரைப்படத் துறையினர்!