Home இந்தியா திபெத் எல்லைகளை மூடியது சீனா! கைலாய யாத்திரை பாதிப்பு !

திபெத் எல்லைகளை மூடியது சீனா! கைலாய யாத்திரை பாதிப்பு !

552
0
SHARE
Ad

chainaகாட்மாண்டு ,ஜூன் 4- நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டதாலும்,கைலாயத்திற்கு யாத்திரை செல்வோரால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டும் சீனா திபெத் எல்லைகளை மூடிவிட்டது.

இதனால், கைலாயத்திற்கு யாத்திரை செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த 38 சுற்றுலா நிறுவனங்களின் மூலம் இந்தியா, ரஷ்யா, மலேசியா மற்றும் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த 25  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

யாத்திரை செல்வோர் நேபளத்தில் இருந்து திபெத் வழியாக மானசரோவர் செல்வது வழக்கம்.இந்நிலையில் சீனா, தத்தபானி, ராசுவா உள்ளிட்ட அனைத்துத் திபெத் எல்லைகளையும் மூடியிருப்பது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேபாள சுற்றுலா அமைச்சகம் இது குறித்துக் கூறியுள்ளதாவது:

“சீன அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசியுள்ளோம்.நேபாள-திபெத் எல்லைகளைத் திறந்து விட ஆவன செய்யும்படி வேண்டியுள்ளோம்.அவர்களும் விரைவில்  பரிசீலித்து முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளனர் ” எனக் குறிப்பிட்டனர்.

இந்தப் பிரச்சனையால், சிக்கிம் வழியாக மானசரோவர் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்து வருகிறது.