Home கலை உலகம் தமிழில் நடிக்க எப்படிச் சம்மதித்தார் மிதுன்சக்கரவர்த்தி?

தமிழில் நடிக்க எப்படிச் சம்மதித்தார் மிதுன்சக்கரவர்த்தி?

653
0
SHARE
Ad

mithumசென்னை, ஜூன்8- மூன்று முறை தேசிய விருது பெற்றவர்; வருமான வரியை முறையாகச் செலுத்தி வருபவர்; சுய கட்டுப்பாடுள்ள நடிகர் என்றெல்லாம் பேர் எடுத்தவர் மிதுன் சக்கரவர்த்தி.

தனக்குப் பிடித்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். இதுவரை இந்திப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்கள் கேட்டுமே தமிழில் நடிக்க ஒப்புக் கொள்ளாதவர்.

அப்படிப்பட்ட மிதுன் சக்கரவர்த்தி, தற்போது சத்யபிரபாஸ் என்னும் புதுமுக இயக்குநரின் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் நடித்துக் கொடுத்திருப்பதோடு படத்தையும் பாராட்டியிருக்கிறார் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது!

#TamilSchoolmychoice

அவரைத் தமிழில் நடிக்கச் சம்மதிக்க வைத்தது எப்படி என்று இயக்குநரிடம் கேட்ட போது:

முதலில் பிடிவாதமாக மறுத்தார். நான் தொடர்ந்து சென்று கதையை மட்டும் கேளுங்கள் போதும் என்றேன். 20 நிமிடத்தில் அவருடைய பாத்திரத்தின் தன்மையை விளக்கினேன். ஆனால் அவர் 1.30 மணி நேரம் சந்தேகம் கேட்டார். பொறுமையாக விளக்கினேன். அதன் பிறகே சம்மதித்தார்.

எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்றார். நான் 16 நாள் வேண்டும் என்றேன். 25 நாள் வேண்டும் என்றாலும் தருகிறேன். உன் மனதில் உள்ளதை அப்படியே எடு.நான் நிறைய புது இயக்கௌநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேந்.அதில் உன்னையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று பெருந்தன்னையாகச் சொன்னார்.

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் மும்பையிலேயே  நடப்பது போன்றது. எனவே, மும்பையிலேயே படப்பிடிப்பு நடந்தது.சொன்னபடி நடித்துக் கொடுத்தார்.அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான-திருப்தியான அனுபவம் என்று சொன்னார்.