Home இந்தியா முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் உடல் செங்கோட்டையில் தகனம்.

முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் உடல் செங்கோட்டையில் தகனம்.

453
0
SHARE
Ad

spandiyanதென்காசி, ஜூலை 13- உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தூர் பாண்டியனின் உடல் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்குச் செங்கோட்டையில் உள்ள  அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

நேற்று காலை அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

seஅவரது இறப்பிற்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாகச் செங்கோட்டையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

பகல் 11.45 மணியளவில் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கற்குடியில் உள்ள தோப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.