Home இந்தியா மறைந்த அமைச்சர் செந்தூர் பாண்டியன் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை!

மறைந்த அமைச்சர் செந்தூர் பாண்டியன் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை!

615
0
SHARE
Ad

sendhoorசென்னை, ஜூலை 12 – மறைந்த அதிமுக அமைச்சர் செந்தூர் பாண்டியனின் கடையநல்லூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தூர் பாண்டியன் (64), கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாகக் கோமா நிலையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார். அவரின் மறைவிற்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், வளர்மதி உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, மறைந்த  அமைச்சர் செந்தூர் பாண்டியன் தொகுதியான கடையநல்லூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் மறைந்துவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ குறிப்பிட்ட அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்த விதி கடையநல்லூர் தொகுதிக்கும் பொருந்தும்.”

“ஆனால், சட்ட மன்ற உறுப்பினரின் பதவிக்காலம் 1 ஆண்டுக்கும் குறைவாக இருக்கும் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது எளிதான ஒன்று அல்ல. ஏனெனில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன.”

“அப்படி இருக்கையில் அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை, விதிமுறைகளின் படி கண்டிப்பாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் ஆலோசனை அவசியம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், “தமிழக அரசும், இடைத்தேர்தல் நடைபெற்றால் தேர்தல் விதிமுறைகளின் படி நலத்திட்ட உதவிகளைச் செய்ய முடியாது என்ற காரணம் கருதி இடைத்தேர்தலைத் தவிர்க்கவே பார்க்கும்” என்றும் தெரிவித்துள்ளனர்.