கொழும்பு, ஜூலை 12 – “பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்போம்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி, இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாடு ஒன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும். போர் நடைபெற்றபோது இராணுவ நோக்கத்திற்காகப் பெறப்பட்ட தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி தேர்தலுக்கு முன் பெரிய அளவில் அரசியலாக்கப்படும் ஈழத் தமிழர் விவகாரம், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அணைந்து விடுகிறது என ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிக்கிறது.
இதனிடையே, ராஜபக்சே பிரதம வேட்பாளராகப் போட்டியிட அதிபர் சிறிசேனா அனுமதி வழங்கியதற்கு அவரின் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.