Home இந்தியா தமிழக அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் மருத்துவமனையில் அனுமதி!

685
0
SHARE
Ad

venkatachalamசென்னை, ஜூலை 12 – தமிழக சுற்றுச் சூழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நேற்று பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வதற்காகவும் ஈரோடு, பெருந்துறையில் உள்ளிட்ட பகுதிகளில் காரில் பயணம் மேற்கொண்டார். பெருந்துறையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஆப்பக்கூடல் பகுதியை நோக்கி அவர் காரில் பயணமாகும் போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவரது உதவியாளர்கள் அவரை உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அமைச்சருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், உடனடியாக அவரை ஈரோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.