Home இந்தியா ஹெலிகாப்டரிலிருந்து தாக்கும் நாக் ஏவுகணைச் சோதனை வெற்றி

ஹெலிகாப்டரிலிருந்து தாக்கும் நாக் ஏவுகணைச் சோதனை வெற்றி

591
0
SHARE
Ad

gheliஜோத்பூர், ஜூலை 14-  இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, 7 கி.மீ. துாரம் பாய்ந்து இலக்கை அழிக்கவல்ல டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான நாக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரில் உள்ள சோதனைத் தளத்தில், முதல் முறையாக ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

மூன்று முறை சோதனை நடத்தப்பட்டது.இரண்டு முறை சரியாக இலக்கைத் தாக்கியது. ஒரு முறை குறி தவறியது. இந்த ஏவுகணை, ஏற்கனவே பொக்ரானிலும், சந்திப்பூரிலும் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்துப் பாதுகாப்புத் துறை-

#TamilSchoolmychoice

“கவச வாகனங்களைத் தாக்கி அழிக்கவல்ல ‘நாக்’ ஏவுகணையின் புது வடிவமான ‘ஹெலினா’ டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, ஹெலிகாப்டரிலிருந்து ஏவ முடியும்; 7 கி.மீ. துாரம் வரை பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும்.

ஆயுதப்படையில், ஹெலினா ஏவுகணை சேர்க்கப்பட்ட பின், நவீன இலகுரக ஹெலிகாப்டரான துருவ் உடன்  ஒருங்கிணைக்கப்படும். துருவ் ஹெலிகாப்டர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்” எனத் தெரிவித்துள்ளது.