Home இந்தியா தென்னிந்திய நகரங்களுக்கு இடையே சேவையைத் தொடங்கியது ட்ரூஜெட் விமானம்!  

தென்னிந்திய நகரங்களுக்கு இடையே சேவையைத் தொடங்கியது ட்ரூஜெட் விமானம்!  

553
0
SHARE
Ad

tru-jet-airlines-by-ram-charan-logo-photosஐதராபாத், ஜூலை 17- தெலுங்கானா ஐதராபாத்தைத் தலைமை மையமாகக் கொண்ட ட்ரூஜெட் விமான நிறுவனம் தென்னிந்தியாவில் தன் விமான சேவையைத் தொடங்கியுள்ளது.

தொடக்கத்தில் சென்னைக்கும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கும் இடையே விமான சேவை வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது அது தவிர,  ஐதராபாத்- ராஜமுந்திரிக்கு இடையேயும், ஐதராபாத் – திருப்பதிக்கு இடையேயும்  இரு மார்க்கங்களிலும் சேவை வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அடுத்து கோவை, சேலம், தூத்துக்குடி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது