Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை ஆதரிக்க வேண்டும் என மிரட்டல்!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை ஆதரிக்க வேண்டும் என மிரட்டல்!

470
0
SHARE
Ad

vishalசென்னை,ஜூலை 17- நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறி சிலர் மிரட்டுவதாக,  நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ஆட்டோ ராஜா புகார் அளித்துள்ளார்.

நேற்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து இப்புகாரைத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாகவும், ஆட்களை அனுப்பியும் மிரட்டுவதாக அவருடைய புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்..

அதேநேரத்தில் இந்தப் புகார் உண்மைக்குப் புறம்பானது என்றும், விஷால் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால், அதனைக் கெடுக்கும் நோக்கில் இது போன்ற அவதூறுகளைச் சிலர் பரப்பி வருகிறார்கள் என்றும் நாடக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.