Home இந்தியா திருச்சிக்கு வரும் ராகுல்காந்திக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு!

திருச்சிக்கு வரும் ராகுல்காந்திக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு!

438
0
SHARE
Ad

raசென்னை, ஜூலை 22- நாளை திருச்சியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள,காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ராகுல்காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமாகிய ராஜீவ்காந்தி தமிழகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது தான் விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலால் உயிரிழந்தார். ஆகையால், அவரது மகன் ராகுல்காந்திக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகக் கூடுதல் பாதுகாப்புக் கோரப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த மனு நீதிபதி சத்ய நாரணயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நிகழ்ச்சி நிரல் குறித்த பட்டியலை காவல்துறைக்கு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.

மேலும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பட்டியலையும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.