Home கலை உலகம் 50 வயதிலும் ‘இரும்பு மனிதன்’ பட்டம் வென்ற மிலிந்த் சோமன்!

50 வயதிலும் ‘இரும்பு மனிதன்’ பட்டம் வென்ற மிலிந்த் சோமன்!

958
0
SHARE
Ad

soman-600x300சென்னை, ஜுலை 23- ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் வில்லனாகக் கௌதம் மேனனால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மிலிந்த் சோமன்.வயது 50.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்குப் பிறகு, கார்த்தியின் ‘பையா’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ பார்த்திபனின் ‘வித்தகன்’ ஆகிய படங்களிலும் நடித்தார்.

இவர் ஏற்கனவே பல விளம்பரங்களிலும் இந்திப் படங்களிலும் நடித்துப் பிரபலமானவர்.

#TamilSchoolmychoice

நடிப்பு இவரது தொழிலாக இருந்தாலும், 50 வயதான போதிலும்,பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசை வெல்வதுதான் இவருக்கு ஆத்மதிருப்தி.

இந்நிலையில் இவர், ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற ‘அயர்ன்மேன் டிரைலத்தான்’ எனும் போட்டியில் கலந்து கொண்டு, 19 மணி நேரத்திற்குள்ளாக 3.8 கி.மீ. தூரம் நீச்சலடித்து, 180.2 கி.மீ. தூரம் சைக்களில் சென்று, அதன்பிறகு 42.2 கி.மீ. தூரம் ஓடி சாதனை புரிந்து, இரும்பு மனிதன்’ என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.