Home இந்தியா திருச்சிக்கு வந்து சேர்ந்தார் ராகுல்காந்தி: வழியெங்கும் வரலாறு காணாத பாதுகாப்பு!

திருச்சிக்கு வந்து சேர்ந்தார் ராகுல்காந்தி: வழியெங்கும் வரலாறு காணாத பாதுகாப்பு!

656
0
SHARE
Ad

M_Id_463704_Rahul_Gandhiதிருச்சி, ஜூலை 23- காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தைத் தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் நடத்துகின்றனர்.

இக்கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

இதற்காக அவர், இன்று மாலை 4. 15 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

ராகுல்காந்தியின் பாதுகாப்புக் கருதி,குண்டு துளைக்காத கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர் தலைமையில், 2,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேடையைச் சுற்றி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராகுல் வரும் பாதையில்,தொலைநோக்கி  மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு, அதன் வழியில் மட்டுமே அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேடை முழுவதையும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன்  சோதனை நடத்தி அனுமதி வழங்கிய பின்பே ராகுல்காந்தி மேடைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.