அதைத் தொடர்ந்து, திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகனும் மேல்முறையீடு செய்தார்.
அதன்பின்னர், இம்மாதம் 21-ஆம் தேதி சுப்பிரமணியம் சுவாமியும், அவ்வழக்கில் தன்னையும் மூன்றாவது மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளுமாறு மனு செய்தார்.
அவ்வழக்கு இம்மாதம் 27-ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகிசந்திரகோஷ், ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகள் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments