பதவி மோகம் பிடித்தும், குடும்பத்தினரின் எதிர்கால நலன்களை மனதில் வைத்தும் வெட்கமில்லாமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வந்துள்ளதன் மூலம் மஹிந்த ராஜ்பக்சே தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் மங்கள சமரவீர காரசாரமாகக் கூறியுள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடவடிக்கைகள் சூடுபிடித்து வரும் சூழ்நிலையில், வெளியுறவு அமைச்சரின் கடுமையான இந்த விமர்சனங்கள் இலங்கையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Comments