Home கலை உலகம் பாகுபலிக்குப் பிறகும் வசூல் குறையாத பாபநாசம்!

பாகுபலிக்குப் பிறகும் வசூல் குறையாத பாபநாசம்!

709
0
SHARE
Ad

papaசென்னை, ஜூலை 23- கமலுடன் கௌதமி நடித்துக் குறைந்த முதலீட்டில் தயாரான படமான பாபாநாசம் ஜூலை3 -ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றது.

250 கோடி முதலீட்டில் தயாரான பிரம்மாண்டப் படமான பாபநாசம் அடுத்த வாரம் வெளியாகி, வசூலில் உலக சாதனை படைத்தது.

அதற்கடுத்த வாரம் ஜூலை17- ல் தனுஷ் நடித்த மாரி படம் வெளியாகி, அந்தப் படமும் வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பாபநாசம் படம் பல கோடி வசூலித்து வசூல் சாதனை படைத்த படங்களின் வரிசையில் சேர்ந்துவிட்டதென்று அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

பாகுபலி வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாபநாசம் படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்றால்,உண்மையில் பெருமைப்படக் கூடிய விசயம் தான்!