Home One Line P2 இரஷ்ய மொழியில் வெளியாகிறது “பாகுபலி-2”

இரஷ்ய மொழியில் வெளியாகிறது “பாகுபலி-2”

818
0
SHARE
Ad

புதுடில்லி – உலகம் முழுவதும் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் செய்த திரைப்படம் பாகுபலி.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடித்து இரண்டு பாகங்களாக வெளியானது இந்தப் படம். தற்போது இதன் இரண்டாவது பாகம் இரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு, இரஷ்யத் தொலைக்காட்சியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலுள்ள இரஷ்யத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தக் காலத்தில் ராஜ்கபூர் நடித்த பல படங்கள் இரஷ்யாவில் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டன.

ஆனால், அதன் பிறகு மற்ற இந்தியப் படங்களுக்கும் அதே போன்ற வரவேற்பு கிடைத்ததா என்பது தெரியவில்லை.

தற்போது பாகுபலி வெளியீட்டின் மூலம் மீண்டும் இந்தியப் படங்கள் இரஷ்யாவில் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.