Home இந்தியா சசிகலா விவகாரம்: சிறையில் கலவரம் வெடிக்கும் அபாயம்!

சசிகலா விவகாரம்: சிறையில் கலவரம் வெடிக்கும் அபாயம்!

1239
0
SHARE
Ad

Sasikalabangaloreprisonபெங்களூர் – சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா நடராஜனுக்கு சிறையில் சகல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை டிஜிபி ரூபா அண்மையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

சசிகலாவிற்கு 5 அறைகள், கட்டில், மெத்தை, துணி தோய்க்க்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, சசியைப் பார்க்க வருபவர்கள் அமர்வதற்கு மேசை நாற்காலி, பிடித்ததை சாப்பிடும் வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை டிஜிபி ரூபா வெளியிட்டார்.

மேலும், சசிகலா கைதிகள் உடுப்பு இல்லாமல் சாதாரண உடுப்பில் சகஜமாக சிறையில் உலாவிக் கொண்டிருக்கும் காணொளி ஒன்றும் நட்பு ஊடகங்களில் கசிந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சிறையில் நடக்கும் இத்தனை முறைகேடுகளை அம்பலப்படுத்திய டிஜிபி ரூபா அதிரடியாக வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

உண்மையை வெளியிட்ட டிஜிப் ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து சிறைக் கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பெங்களூர் சிறையில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.