“அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று கமல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு அடுத்த பதிவில், புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி என்று ஒரு தகவலையும் கமல் பதிவு செய்திருக்கிறார்.
“இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிருந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிந்தோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடா பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்”
என்ற கவிதையையும் கமல் பதிவு செய்திருக்கிறார்.