Home Featured நாடு “2.6 பில்லியன் பணம் சென்ற பாதை” – அபாண்டி விளக்க முடியுமா?

“2.6 பில்லியன் பணம் சென்ற பாதை” – அபாண்டி விளக்க முடியுமா?

1248
0
SHARE
Ad

gobind singh deo-கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்குச் சென்ற 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தின் பாதை என்ன என்பதையும், அது உண்மையிலேயே நன்கொடைதான் என்பதையும் சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) டான்ஸ்ரீ அபாண்டி அலி விளக்க முடியுமா என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ சவால் விடுத்துள்ளார்.

1எம்டிபி ஊழல் தொடர்பான ஆதாரங்களை அபாண்டி அலி மறைத்து விட்டார் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியிருந்ததைத் தொடர்ந்து, அந்தக் குற்றச்சாட்டுகளை அபாண்டி அலி மறுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் மலேசியா கினி இணைய செய்தித் தளத்திற்கு தெரிவித்த செய்தியில் கோபிந்த் சிங் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கோபிந்த் ஜசெகவின் சட்டப் பிரிவு தலைவருமாவார்.

“இதுவரையில் அவர் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் சட்டத் துறைத் தலைவர் என்ற முறையில் அவரது நடத்தை கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, மக்களை நம்பச் செய்ய, அவர் தனது முடிவுகளை எடுக்க, எத்தகைய ஆதாரங்களை அவர் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார், சர்ச்சைக்குரிய அந்தப் பணம் சென்ற பாதை என்ன என்பது போன்ற விவரங்களை தகுந்த ஆவணங்களுடன் அவர் விளக்க வேண்டும்” என்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

திங்கட்கிழமை (ஜூலை 17) இரவு ஷா ஆலாமில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய துன் மகாதீர் அதிகாரத்துவ இரகசியக் காப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, அபாண்டி அலி 1எம்டிபி ஊழல் தொடர்பான ஆதாரங்களை மறைத்துள்ளார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் அபாண்டி அலி மீது இது குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும் மகாதீர் கூறியிருந்தார்.

மகாதீரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அபாண்டி, “நான் மகாதீருக்கோ, அல்லது வேறு எந்த மனிதருக்கோ பயப்படவில்லை. கடவுள் ஒருவருக்குத்தான் பயப்படுகிறேன்” என பதிலளித்திருந்தார்.