Home இந்தியா திருச்சி விமான நிலையத்தில் விடுதலைப்புலி உட்பட மூவர் கைது!

திருச்சி விமான நிலையத்தில் விடுதலைப்புலி உட்பட மூவர் கைது!

616
0
SHARE
Ad

LTTE-Logoதிருச்சி, ஜூலை 27- திருச்சி விமான நிலையத்தில் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவரையும் அவருக்கு உதவிய இருவரையும்  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

கடந்த 20-ஆம் தேதி ராமநாதபுரம் அருகே ந்டந்த வாகன சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இணைந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க முயற்சித்த திடுக்கிடும் செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கியூ பிரிவு மற்றும் உளவுப்பிரிவுக் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, போலிக் கடவுச்சீட்டில் மலேசியா செல்லவிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குமரகுரு என்பவரும், அவர் உதவிய இருவரும் பிடிபட்டனர்.

குமரகுரு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போரின் போது, ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் தனது வலதுகாலை இழந்தவர்.

பின்னர் இலங்கையில் இருந்து தப்பி வந்து, சென்னை ஈக்காடுதாங்கலில் தங்கியிருந்தார். இந்நிலையில் இவர் மலேசியா சென்று, அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டார். அதற்காக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பமூலம் போலிக் கடவுச் சீட்டு பெற்றார்.