Home நாடு 1எம்டிபி உதவியாளர் கைது – அடுத்து தேநீர் வழங்கும் பெண்ணா? – சைட் இப்ராகிம் கிண்டல்

1எம்டிபி உதவியாளர் கைது – அடுத்து தேநீர் வழங்கும் பெண்ணா? – சைட் இப்ராகிம் கிண்டல்

610
0
SHARE
Ad

Zaidகோலாலம்பூர், ஜூலை 27 – 1எம்டிபி விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கியத் தலைவர்களை விடுத்து, மற்றவர்களை காவல்துறை கைது வருகிறது என்ற அர்த்தத்தில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராகிம் தனது டுவிட்டரில் வேடிக்கையாகக் கருத்து கூறியுள்ளார்.

சைட் இன்று தனது டுவிட்டரில், “1எம்டிபி உதவியாளர் கைது செய்யப்பட்டுவிட்டார். அடுத்து தேநீர் வழங்கும் பெண் தான்” என்று கிண்டலாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

சைட்டின் கருத்தை வரவேற்றுள்ள அவரைப் பின்தொடர்பவர்களில் ஒருவர், “சுத்தம் செய்பவர்கள், பாதுகாவலர்கள் கூட அடுத்து கைது செய்யப்படலாம்” என்று பதில் கருத்துத் தெரிவித்துள்ளார்.