அத்தனை பேரின் பாராட்டிற்கும் மணிமகுடமாகப் பிரதமர் மோடி தற்போது அந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்துப் பிரமித்து, “படம் பிரமாதம்; பிரம்மாண்டம்” என்று பாராட்டியுள்ளார்.
அதோடுமட்டுமல்லாமல், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரபாஸை அழைத்து நேரடியாகத் தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார். மேலும், பாகுபலி படம் இதற்கு மேலும் பல கோடிகளை வசூலித்து, உலக அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இந்திய நாட்டிற்குப் பெருமை தேடித் தரவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் முழுப்படத்தையும் பார்க்கும்படி வேண்டியதாகவும், அதற்கு மோடி “கட்டாயம் பார்ப்பேன்; இருந்தாலும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல முன்னோட்டக் காட்சிகளே முழுக் கதையையும் உணர்த்துகின்றன” எனத் தெரிவித்ததாக நடிகர் பிரபாஸ் கூறினார்.