Home கலை உலகம் விட்னி ஹூஸ்டனின் மகள் பாபி கிறிஸ்டினா பிரவுன் மரணம்!

விட்னி ஹூஸ்டனின் மகள் பாபி கிறிஸ்டினா பிரவுன் மரணம்!

720
0
SHARE
Ad

mbpix127நியூயார்க், ஜூலை 27 – மறைந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டன் மற்றும் பாடகர் பாபி பிரவுனின் மகளான பாபி கிறிஸ்டினா பிரவுன், நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது 22 வயதில் அகால மரணமடைந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி, கிறிஸ்டினா தன் வீட்டு குளியறையில் சுயநினைவின்றி காணப்பட்டார்.

அதிகமான போதை உட்கொண்ட நிலையில் சுயநினைவின்றிக் கிடந்த அவரை, அவரது நண்பர்கள் ஜார்ஜியா ரோஸ்வெல்லில் உள்ள நார்த் ஃபல்டன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், பிராணவாயுக் கருவிகளின் உதவியோடு கோமா நிலையில், அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஜுன் 24-ம் தேதி, மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று ஜூலை 26-ம் தேதி தனது குடும்பத்தினர் முன்னிலையில் மரணத்தைத் தழுவினார்.

இது குறித்து விட்னி ஹூஸ்டன் குடும்பத்தினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவள் இறுதியாக கடவுளின் கரங்களில் சேர்ந்துவிட்டாள்” என்று தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டினாவின் தாயார் விட்னி ஹூஸ்டன், பாப் இசை உலகில் கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு, அவரும் இதே போன்று தங்கும் விடுதியின் குளியறையில் இருந்த நீர்த்தொட்டியில் (பாத்டப்), கோக்கைன் என்ற போதை மருந்தை அதிகளவில் உட்கொண்டு சுயநினைவின்றி இறந்து கிடந்தார். இதய நோயாளியான அவர் அதிகமான போதை மருந்தை உட்கொண்டதால், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று விசாரணை முடிவில் தெரியவந்தது.

இந்நிலையில், அவரது மகள் கிறிஸ்டினாவும், தனது தாயாரின் மூன்றாவது நினைவு தினம் வருவதற்கு சில தினங்களுக்கு முன் கடந்த ஜனவரி 31-ம் தேதி, அதிக போதை மருந்து உட்கொண்ட நிலையில் பாத்டப்பில் சுயநினைவின்றி காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.