Home உலகம் நேபாளத்தில் நிலச்சரிவு: 30 பேர் பலி!

நேபாளத்தில் நிலச்சரிவு: 30 பேர் பலி!

680
0
SHARE
Ad

nepalகாத்மாண்டு, ஜூலை 30 – நேபாளத்தின் மலை சார்ந்த பகுதியில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நேபாளத்தின் மேற்குப்பகுதியான லியும்லேவில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதையுண்டது. இதில் 30 பேர் பலியாகி உள்ளதாக நேபாள மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர், மண்ணில் புதைந்து இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தான், நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.