Home Featured தமிழ் நாடு மதுவிற்கு எதிராக வைகோ நடத்திய போராட்டத்தில் கண்ணீர்புகை குண்டு வீச்சு!

மதுவிற்கு எதிராக வைகோ நடத்திய போராட்டத்தில் கண்ணீர்புகை குண்டு வீச்சு!

697
0
SHARE
Ad

kalingapatti-vaikoதிருநெல்வேலி, ஆகஸ்ட் 2 – தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கலிங்கப்பட்டியில் மதிமுக பொது செயலாளர் வைகோ நடத்திய போராட்டத்தில் திடீரென பெரும் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள் மதுக்கடையை சூறையாடியதால், காவல்துறையினர்  தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். எனினும், போராட்டக்காரர்கள் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதால், கண்ணீர் புகை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காவல்துறையினர்  போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

திடீரென கலவரம் வெடித்தது பற்றி வைகோ கூறுகையில், “நாங்கள் நியாயமான போராட்டம் நடத்தினோம்.  டாஸ்மாக் கடையை நாங்கள் முற்றுகையிட்ட போது காவல்துறையினர் எங்கள் மீதும், என் மீதும் கண்ணீர் புகை வீசினர். காவல்துறையினருக்கு துணிவு இருந்தால் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தட்டும். முடிந்தால் என்னை கைது செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.