மதுவிற்கு எதிராக போராடிய சசிபெருமாளின் மரணம், தமிழகத்தில் மிகப் பெரிய அரசியலை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் தொடர் போராட்டங்களை தமிழகம் எங்கும் நடத்தி வரும் நிலையில், சேலத்தில் தேமுதிக-வினரை அழைத்துக் கொண்டு மதுவிற்கு எதிராக மௌன ஊர்வலம் நடத்திய விஜயகாந்த், ஊர்வலத்தின் முடிவில், ஜெயலலிதா ஹிட்லரைப் போல் ஆட்சி செய்கிறார். அவர் ஒரு சர்வாதிகாரி என்று விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, கலிங்கப்பட்டியில் மதிமுக பொது செயலாளர் வைகோ நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments