Home இந்தியா ‘கோமென்’ புயலால் வட மாநிலங்களில் பயங்கர வெள்ளம்: 80 லட்சம் பேர் பரிதவிப்பு

‘கோமென்’ புயலால் வட மாநிலங்களில் பயங்கர வெள்ளம்: 80 லட்சம் பேர் பரிதவிப்பு

500
0
SHARE
Ad

kosi_flood_1-300x160மேற்கு வங்காளம், ஆகஸ்டு 3- மேற்கு வங்காளம், ஒடிசா, மணிப்பூர், குஜராத், ராஜஸ்தான் முதலான வட மாநிலங்களில் கன மழை பெய்ததால் உண்டான வெள்ளத்தில் சிக்கி 81 பேர் உயிரிழந்துள்ளனர்; 80 லட்சம் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

ஆந்திரா அருகே வங்கக்கடலில் உருவான ‘கோமென்’ புயலால் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, மணிப்பூர், குஜராத், ராஜஸ்தான் முதலிய வட மாநிலங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதனால், இம்மாநிலங்களில் கட்டடங்கள், வீடுகள் போன்றவை இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாலும், பாலங்கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் அனைத்துப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

maமேற்கு வங்கத்தில் ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கியும், பொந்துக்குள் இருந்து பாம்புகள் வெளியேறி வந்து கடித்தும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோல், ராஜஸ்தானில் 28 பேரும், ஒடிசாவில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவில் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்,1 0 கிராமங்கள் நீரில் அடியோடு மூழ்கிவிட்டன. 600 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 5 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தில் தவிப்பவர்களில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.