Home இந்தியா புதுக் கட்சி தொடங்கினார் சங்மா

புதுக் கட்சி தொடங்கினார் சங்மா

999
0
SHARE
Ad

புதுடில்லி, ஜனவரி 5 – சமீபத்தில் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பி.ஏ.சங்மா புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.

மத்திய அமைச்சராகவும் மக்களவைத் தலைவராகவும் இருந்தவர் பி.ஏ.சங்மா. காங்கிரஸ் கட்சியிலிருந்த இவர் பின்னர் வெளிநாட்டவரான சோனியா காந்தியின் தலைமையை ஏற்காமல் சரத் பவாருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தன்னை வேட்பாளராக நிறுத்த தேசியவாத கட்சி மறுத்ததும் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து வெளியேறினார். இப்போது அவர் தேசிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். இது குறித்து புது தில்லியில் அவர் கூறியதாவது:

தேசிய அளவில் பழங்குடியினர், பெண்கள் பிரச்னைகளை முன்வைத்துச் செயல்படும் கட்சியாக தேசிய மக்கள் கட்சி இருக்கும்.  விரைவில் மேகாலயத்தில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம். எங்களது சின்னம் புத்தகம். கல்வியின் மூலம்தான் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும் என்பதன் குறியீடாக இந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம் எனக் கூறினார்