Home நாடு பேராக் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் தமிழ்ப் பள்ளி வாரியத்திற்கான பெயரில் மாற்றம்...

பேராக் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலம் தமிழ்ப் பள்ளி வாரியத்திற்கான பெயரில் மாற்றம் வேண்டும்

930
0
SHARE
Ad

ஈப்போ, மார்ச் 10 – கடந்த சனிக்கிழமை பேரா மாநிலத் தமிழ் பள்ளியின் மேலாளர் வாரியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேராக் மாநிலத்தில் தமிழ் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கான அறவாரியப் பெயரை, பேரா தமிழ்பள்ளி கல்வி மேம்பாட்டு அறவாரியமாக மாற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வாரியக்குழு ஏகமனதாக முடிவுசெய்து அறிவித்தது.

மேலும், இந்த அறவாரியத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதோடு மட்டுமல்லாமல் வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என்றும், அவர்களும் பள்ளிகளோடு நேரடியாக தொடர்புடையவர்களாக இருக்கவேண்டும் எனவும் இந்த வாரியக் குழுவினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

வாரியத்தில் அரசியல்வாதிகள் வேண்டாம்

சங்கத்தலைவர் டத்தோ என். மாரிமுத்து தலைமையில் கூடிய கூட்டம் வாரியத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கக் கூடாது என்றும் முடிவெடுத்திருந்தது.

இடைநிடைப்பள்ளி இந்திய மாணவர்கள் மேம்பாட்டிற்கும் நிதி வேண்டி கோரிக்கை

9 சீனப்பள்ளிகளுக்கு 2,500 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 134 தமிழ்பள்ளிகளுக்கு வெறும் 2,000 ஏக்கர் மட்டுமே ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர்கள், இதிலிருந்து பெறப்படும் வருமானம் தமிழ்பள்ளி மாணவர்களுக்கே போதாத நிலையில், தங்களால் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு உதவ இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு உதவ மாநில அரசு தனி நிதி பெற திட்டம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

மாநில அரசு இந்த   2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழ்பள்ளிகளுக்கான உரிமைச் சொத்தாக மாற்றித்தரவேண்டும் என மிக முக்கியமான கோரிக்கையாக அவர்கள் வைத்தனர்.

அதோடு வாரியத்தோடு நேரடித் தொடர்புடைய சில அமைப்புகளையும் இணைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ ஸம்ரியை சந்திக்கவிருப்பதாகவும் வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்..