Home நாடு லகாட் டத்துவில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்

லகாட் டத்துவில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்

627
0
SHARE
Ad

D

லகாட் டத்து, மார்ச் 11 – நேற்று கம்போங் தஞ்சோங்கில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.மேலும் ஒருவர் காலில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமார்  நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாதுகாப்புப் படையினர்  ஊடுருவல்காரர்களுக்கு எதிரான தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று தடைசெய்யப்பட்ட பகுதியிலுள்ள புதருக்குள் இருந்து பதின்மவயதைச் சேர்ந்த ஐவர்(மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்) தோன்றினர். இதனால் சத்தம் வந்த திசையை நோக்கி பாதுகாப்புப் படையினர் சரமாரியாகச் சுட்டனர். பிறகு அந்த இடத்திற்குச் சென்று சோதனையிட்ட  போது ஒருவர் குண்டடிபட்டு இறந்து கிடந்தார் மற்றொருவர் காலில் காயம் பட்டு துடித்துக்கொண்டு இருந்தார்.உடனடியாக மேலதிகாரிகளுக்கு இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு,ராணுவ மருத்துவ உதவிக்குழு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் பிணத்தை கைப்பற்றி, காயமடைந்தவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தது.

#TamilSchoolmychoice

அவர்களிடம் தங்களது பெயர், ஊர் பற்றி எந்தவிதமான ஆவணங்களும் இல்லாததால், அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று இஸ்மாயில் ஓமார் தெரிவித்தார்.