Home Featured நாடு நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்

நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்

792
0
SHARE
Ad

Tian Chua-Nurul Izzahகோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக அண்மையில் பிகேஆரின் மற்றொரு உதவித் தலைவரான நூருல் இசாவிடமும் காவல்துறை விளக்கம் பெற்றது. இதையடுத்து தியான் சுவாவும் அழைக்கப்பட உள்ளார்.

தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் நூருல் இசா மீதான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தலைவர் காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தாம் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறோம் என்பது குறித்து தனக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதாக நூருல் இசா கூறியிருந்தார். அதே சட்டப்பிரிவின் கீழ் தான் தியான் சுவாவும் விசாரிக்கப்பட உள்ளாரா என்பது தெரியவில்லை.

Nurulசூலு சுல்தான் மகள் ஜேசல் கிரமுடன் நூருல் இசாவும் தியான் சுவாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அண்மையில் வெளியானதையடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதையடுத்து சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிராமை சந்தித்தது தொடர்பிலான ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார் நூருல் ஈசா.

இந்த விவகாரம் தொடர்பாக தாம் வருத்தமடைந்துள்ளதாகவும், காவல்துறையுடன் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள், புகைப்படங்கள் வழி தெளிவு பிறக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதே விவகாரத்துக்காக தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்.