Home உலகம் துபாய் நட்சத்திர ஓட்டலில் தகராறு: தமிழகத் தொழிலதிபர் கொலை!

துபாய் நட்சத்திர ஓட்டலில் தகராறு: தமிழகத் தொழிலதிபர் கொலை!

606
0
SHARE
Ad

1020291065துபாய், ஆகஸ்ட்12- துபாய் நட்சத்திர ஓட்டலில் இரு தரப்பிற்கிடையே நடந்த மோதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டார்.அவரைத் தாக்கிய அரபு நாட்டு இளைஞர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் யாதவ் என்பவர், துபாயில் ரியல் எஸ்டேட் முகவராகப் பணியாற்றி வந்தார்.

இவர் தனது நண்பர்களுடன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்குச் சாப்பிடச் சென்றார். அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையில் அரபு நாட்டு இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மகேந்திரன் தனது நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர் தன்னையும் தன் காதலியையும் தான் கேலி பண்ணிச் சிரிக்கிறார் எனக் கோபம் கொண்டார் அந்த இளைஞர்.

மேலும், மகேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைபேசியில் புகைப்படம் எடுக்க, ஏற்கனவே கோபத்தில் இருந்த அந்த இளைஞர், மகேந்திரன் தனது காதலியைத்தான் புகைப்படம் எடுப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியது. சண்டையின் போது அந்த இளைஞர், மகேந்திரனின் தலையின் பின்புறம் ஓங்கி அடித்தார். இதில் மகேந்திரன் மயங்கி விழுந்தார்.

அதைப் பார்த்த நண்பர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் பயந்து போய் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனே அவசரச் சிகிச்சை வாகனத்தை வரவழைத்து மயங்கிக் கிடந்த மகேந்திரனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரபு நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மகேந்திரன் உடலைத் தமிழகத்திலுள்ள அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்குக் கொண்டு வர அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சாதாரணப் பேச்சு வினையாகி நண்பருடைய உயிரையே பறித்து விட்ட சமபவத்தை எண்ணி நண்பர்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்கள்.