Home இந்தியா லலித் மோடியை இந்தியாவிற்குக் கொண்டு வர அனைத்துலகக் காவல்துறையின் உதவி!

லலித் மோடியை இந்தியாவிற்குக் கொண்டு வர அனைத்துலகக் காவல்துறையின் உதவி!

623
0
SHARE
Ad

lalit-modiபுதுடில்லி, ஆகஸ்ட் 12-    தலைமறைவாக வெளிநாட்டில் பதுங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் குற்றவாளி லலித் மோடியை இந்தியாவிற்குக் கொண்டு வர அனைத்துலகக் காவல்துறையின் உதவியை நாட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

2009 –ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தலைவராக இருந்த லலித் மோடி, ஒளிபரப்பு உரிமை வழங்குவதில் மோசடி செய்ததோடு சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.       அந்நிலையில் லலித் மோடி தலை மறைவானார்.

அவர் லண்டனில் பதுங்கியுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் வந்தது.

#TamilSchoolmychoice

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு அமலாக்கத்துறை அவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் அதை மதிக்காததால், அவருக்குமும்பை சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாதபடி கைது நடவடிக்கை (பிடிவாரண்ட்)பிறப்பித்தது.

அந்த உத்தரவும் பலனளிக்காததால் ,நீதிமன்றத்தில்  சிகப்பு முனைக் கடிதம் (ரெட் கார்னர் நோட்டீஸ்)பெற்று, சிபிஐ மூலம் பன்னாட்டுக் காவல்துறையின் உதவியை நாடி, லண்டனிலிருந்து லலித் மோடியை இந்தியாவிற்குக் கொண்டு வர அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் உதவியையும் நாடுவது என அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது.