சென்னை, ஆகஸ்ட் 12 – ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வசனகர்த்தா, பாடலாசிரியர் என பண்முகங்களைக் கொண்டிருந்த் மூத்த கலைஞரான தி.மு.க. தவைலர் கருணாநிதிக்கு நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட நடிகர் சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதாக தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது வரை ஆயுட் கால உறுப்பினராக இருந்து வந்த அவர், தற்போது தொழில்முறையற்ற ஆயுட்கால உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளதால், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, நடிகர் சங்க தேர்தலில் அவர் இனி வாக்களிக்க முடியாது என்றும் கூறப்படுகின்றது.
அதே வேளையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஓட்டு போடும் உரிமை பெற்ற ஆயுட்கால உறுப்பினராக நீடிப்பதால் அவர் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கிறார்.
அதோடு ஆயுட்கால உறுப்பினர்கள் பட்டிலில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான், ராதாரவியின் மகன் ஹரி ஆகியோர் சேர்க்கப்பட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், சரத்குமார் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த சிலரையும் நடிகர் சங்க உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.