Home Featured கலையுலகம் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் பேத்தி படுகொலை!

பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் பேத்தி படுகொலை!

619
0
SHARE
Ad

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????மன்ஹாட்டன், ஆகஸ்ட் 17 – ‘பேட் மேன்’, ‘மில்லியன் டாலர் பேபி’, ‘வான்டெட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் பேத்தி ஈடினா ஹைன்ஸ்(படம்) நேற்று கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

மன்ஹாட்டன் வீதியில் ஈடினா ஹைன்ஸ், அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த காவல்துறையினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈடினா ஹைன்சின் மரணம் குறித்து மோர்கன் ஃப்ரீமேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைன்ஸ் திறமையும், கலைத்திறனும் வெளியுலகிற்கு தெரியாமலே போய்விட்டது. அவளின் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, மன்ஹாட்டன் காவல்துறையினர் ஈடினா ஹைன்ஸ், கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். விரைவில், அவரது படுகொலை தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.