Home இந்தியா பெங்களூர் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கைதி சுட்டுக் கொலை!

பெங்களூர் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கைதி சுட்டுக் கொலை!

442
0
SHARE
Ad

TamilDailyNews_2851024866105பெங்களூர், ஆகஸ்ட் 17- பெங்களூர் மருத்துவமனையில் கண்மூடித்தனமாகச் துப்பாக்கிச்சூடு நடத்திய விசாரணைக் கைதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

வாகனங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்திய விவகாரத்தில்  விஸ்வநாத்( வயது22) என்பவனைப் பெங்களூர் காவல்துறையினர் கைது செய்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைத்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாகச் சிறையில்அடைக்கப்பட்டிருந்த விஸ்வநாத், மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று மதியம் காவல்துறையினர் அவனை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக  அழைத்துச் சென்றனர்.

மதியம் 3.45 மணியளவில் அவன் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதால், அவனது கைவிலங்கைக் கழற்றிய காவலர் ஒருவர்,  அவனைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றுவிட்டுள்ளார்.

கழிவறையில் இருந்து திரும்பி வந்த அவன், திடீரென்று காவலர் எதிர்பாராமல் அவரது கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்து அங்குமிங்கும் கண்மண் தெரியாமல் சுட்டிருக்கிறான். அவனை மடக்கித் துப்பாக்கியைக் கைப்பற்ற, அடுத்து, மருத்துவமனையில் காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் திடீரெனப் புகுந்த அவன், அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினான்.

காவலர்கள் அவனை அந்த அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டனர். அதனால் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை.

ஆனாலும் அவன் அந்த அறைக்குள் இருந்து சுட்டுக் கொண்டே இருந்தான்.

இத்தகவல் அறிந்து அங்கே வந்த கமாண்டோப் படை வீரர்கள், விஸ்வநாத்திடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றும் முடியவில்லை. அப்போது அவன் அவர்களைச் நோக்கிச் சுடத் தொடங்கியதால், கமாண்டோ வீரர்களும் சுட வேண்டியதாகி விட்டது.

இதில் அவன் குண்டு பாய்ந்து உயிரிழந்தான்.

இதனால்  ஏறக்குறைய 3 மணிநேரம் அந்த மருத்துவமனை வளாகம் பதட்டமாக காணப்பட்டது.