Home இந்தியா ஈவிகேஎஸ்-க்கு முன் பிணை மறுப்பு: எந்த நேரமும் கைது செய்யப்படலாம்!

ஈவிகேஎஸ்-க்கு முன் பிணை மறுப்பு: எந்த நேரமும் கைது செய்யப்படலாம்!

472
0
SHARE
Ad

11-1407742469-evks-ilangovan54-600-jpgசென்னை, ஆகஸ்ட் 21- காங்கிரஸ் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, காமராஜர் அரங்க ஊழியர் வளர்மதி என்ற பெண் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதும், மேலாளர் நாராயணன் மீதும் புகார் அளித்துள்ளார். இதனால், இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காமராஜர் அரங்கத்துக்குச் சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலில் இளங்கோவன் பெரும் மோசடி செய்திருக்கிறார் என்றும், இது தொடர்பாக நான் புகார் கொடுத்தால் என்னை  மிரட்டுகிறார் என்றும் வளர்மதி தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரினால் தன்னைக் காவல்துறையினர் கைது செய்யலாம் என்பதால், இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கவும் அவர்  வேண்டுகோள் வைத்திருந்தார்

#TamilSchoolmychoice

ஆனால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆகையால், இவ்வழக்கில் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே அவர் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பைக் கீழ்த்தரமாக விமர்சித்ததாக அவரைக் கைது பண்ணச் சொல்லி அதிமுக-வினர்  தொடர்ந்து 5-ஆவது நாளாகக் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் இளங்கோவன் மீது ஏற்கனவே ஜெயலலிதா அவதூறு வழக்கும் போட்டுள்ளார்.

இந்நிலையில் வளர்மதி கொடுத்த வழக்கும் சேர்ந்து விட்டதால் இளங்கோவனுக்கு இது  இக்கட்டான தருணம் தான்.