Home கலை உலகம் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப் பணிகள் இன்று தொடங்கின.

ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப் பணிகள் இன்று தொடங்கின.

622
0
SHARE
Ad

1802சென்னை, ஆகஸ்ட் 21- ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட வேலைகள் இன்று தொடங்கின.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கவிருக்கும் புதுப் படத்தின் பெயர் ‘கபாலி’ என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதே பெயரில் வேறொரு படம் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருப்பது பின்பு தான் தெரிந்தது .இருந்தாலும் படத்தின் தலைப்புப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் எனப் படத்தின் தயாரிப்பாளர் தாணு சொன்னார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இப்படத்தின் வேலை இன்று புகைப்படம் எடுக்கும் பணியுடன்(போட்டோ ஷுட் உடன்) தொடங்கியது. இந்த போட்டோ ஷுட்டில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்துள்ளார் ராதிகா ஆப்தே.

இன்று நடைபெறும் போட்டோ ஷுட்டில் ரஜினிகாந்த்,ராதிகா ஆப்தே இருவர் மட்டும் பங்கேற்றார்கள்.

இப்படத்தின் முதல் பார்வை விளம்பரச் சுவரொட்டிகள் (ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்) விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும்.

அடுத்த மாதம் 17-ஆம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கும்.