பாங்காக், ஆகஸ்ட் 21 – பாங்காக் குண்டுவெடிப்புக்கு காரணமான சதிகாரன் என சந்தேகிக்கப்பட்ட நபர் அப்பாவி என்று தெரியவந்துள்ளது. 20 பேர் மரணிப்பதற்கு காரணமானவராக அந்த நபர் சித்தரிக்கப்பட்டதற்கு தாய்லாந்து தொலைக்காட்சி நிலையம் மன்னிப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்து ஒளிபரப்பு ஆணையத்தின் தலைவர் அதிசக் லிம்ப்ரங்படனாகிஜ் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய தொலைக்காட்சி நிர்வாகம் இந்த செயலுக்காக உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. பொது உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல், இறந்தவருக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் விதமாக எங்களின் செயல் அமைந்து விட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் தவறுக்கு அவர் மன்னிப்பு கோரி இருந்தாலும், தவறான கண்ணோட்டத்துடன் ஒருவரை சித்தரித்ததற்கு நட்பு ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.