Home கலை உலகம் நடிகை ஆஷா சரத் போலி ஆபாசப் படங்களைப் பரப்பிய இரு இளைஞர்கள் கைது!

நடிகை ஆஷா சரத் போலி ஆபாசப் படங்களைப் பரப்பிய இரு இளைஞர்கள் கைது!

700
0
SHARE
Ad

asதிருவனந்தபுரம்,ஆகஸ்ட்21- கேரளாவைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞரான ஆஷா சரத், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் காவல்துறை ஆணையராக நடித்து ஒரு நடிகையாகவும் புகழ் பெற்றார்.

அதைத் தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடித்த திரிஷ்யம் படத்தின் மறு பதிப்பான பாபநாசம் படத்திலும் அதே காவல்துறை ஆணையராக நடித்துத் தமிழிலும் புகழ் பெற்றார். அவரின் இயல்பான நடிப்பைப் பார்த்து கமல்ஹாசன் தனது அடுத்த படம் தூங்காவனத்திலும் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்தார்.

இந்நிலையில் திடீரென அவரது ஆபாசப் படம் (போலியானது) இணையதளத்திலும் வாட்ஸ்அப்பிலும் பரவியதைக் கண்டு பதறிப் போனார். உடனடியாக இதுகுறித்துக் கேரளா கொச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் செய்தார்.

#TamilSchoolmychoice

அவரது உத்தரவின் பேரில் சுழியம் குற்றவியல் காவல்துறையினர் (cyber crime police) ஆய்வு நடத்தி கேரளா மலப்புரம் பகுதியில் உள்ள இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்கள் ஆஷா சரத்தின் புகைப் படத்தை ஆபாசமாகச் சித்தரித்து (மார்பிங் செய்து) முகநூலில் வெளியிட்டதை ஒப்புக்  கொண்டனர்.

இதுபோல் பல நடிகைகளின் போலி ஆபாசப் படங்களைச்  சமூக வலைதளங்களில் பரப்பியதும் அவர்கள் தான் என்பது தெரிய வந்தது.

அந்த இருவரும் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால், அவர்கள் பற்றிய எந்த விவரங்களையும் கேரளக் காவல் துறையினர் வெளியிடவில்லை.