Home கலை உலகம் சர்ச்சைப் பெண் சாமியார் ராதே மாவை டுவிட்டரில் பின்பற்றுகிறார் பிரிட்டனி பியர்ஸ்!

சர்ச்சைப் பெண் சாமியார் ராதே மாவை டுவிட்டரில் பின்பற்றுகிறார் பிரிட்டனி பியர்ஸ்!

728
0
SHARE
Ad

paமும்பை, ஆகஸ்ட் 21- மும்பையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மாவைப் பிரபல பாப் பாடகி பிரிட்டனி பியர்ஸ் டுவிட்டரில் பின்பற்றுகிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா.

கவர்ச்சிகரமாக உடை அணிவது, லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வது, குட்டைப் பாவாடை அணிந்து பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவது, தனது பக்தர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, சூலாயுதத்தோடு விமானத்தில் பயணிப்பது என இவர் பண்ணும் அழிச்சாட்டியங்களுக்கு அளவில்லை.

#TamilSchoolmychoice

இவர் பண்ணும் சேட்டைகள் எல்லாமே இப்போது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ரொம்பப் பிரபலம்.

இவர் மீது காவல்துறையில் குவிந்து கிடக்கும் புகார்களும் ஏராளம். இவர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு கூட உள்ளது. ஆனால், எதற்கும் கவலைப்படாமல் அவர் வழியில் அவர் பாட்டுக்குச் செய்வதைச் செய்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட இவரை உலகப் பிரசித்தி பெற்ற பாப் பாடகி பிரிட்டனி பியர்ஸ் டுவிட்டரில் பின்பற்றுபவராக உள்ளார் என்பது தான் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குக் காரணம் பிரிட்டனி பியர்ஸ் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

ra